இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி ஜெனிவாவில் பல உபகுழுக் கூட்டங்கள்

Published By: Raam

27 Jun, 2016 | 07:43 AM
image

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற  ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது  கூட்டத்தொடரில்  பல்வேறு தரப்புக்களினால் உப குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் இலங்கை அரசாங்கம்  சர்வதேச அரசசார்ப்பற்ற நிறுவனங்கள்,  மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள்  போன்ற தரப்பினர்  உப நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். 

அந்தவகையில்  பல்வேறு  அரச சார்பற்ற நிறுவனங்கள்  இலங்கை மனித உரிமை நிலைமை தொடர்பாகவும் ஜெனிவா  மனித உரிமை பேரவைக் கட்டடத்தொகுதியில் பல்வேறு உபகுழுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. 

இதேவேளை  புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்   ஜெனிவாவில்  உப குழுக்கூட்டங்களை  இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி  நடத்திவருகின்றன.  அத்துடன்  நாளை 28 ஆம் திகதி  நடைபெறவுள்ள உபக்குழு கூட்டமொன்றில்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  இலங்கையின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். 

ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் பல்வேறு உப குழுக்கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார்.  

இந்தக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நீதி கிடைக்கவேண்டுமென  வலியுறுத்தி வருகின்றார்.  அந்த வகையில் எதிர்வரும்   ஐந்து நாட்களிலும்  தொடர்ச்சியாக இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி  பல்வேறு  உபகுழுக்கூட்டங்கள்  நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46