மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சைக்கு சென்று மரணமடைந்த கொழும்பு முகத்துவார பெண்ணுக்கு கொரோனா - முழுமையான செய்திக்கு ......

05 May, 2020 | 09:38 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக இன்று இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவானது.

கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின்  மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க  தெரிவித்தார்.

 

நேற்று இரவு , முகத்துவாரம் -  மெத்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தாயொருவர், மூச்சுத் திணறல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு அவருக்கு பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது  நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்போதும் குறித்த பெண்ணின் நிலை தீவிரமாக இருந்துள்ள நிலையில், உடனடியாகவே தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இன்று காலை குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்ததாக அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஒருவர் கூறினார்.

இந் நிலையில் குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று இரவு,  முல்லேரியா - கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றதுடன், இதன்போது பிரேதம் தகனம் செய்யப்பட்டது.

இந் நிலையில், இன்று உடனடியாக செயற்பட்ட சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும், முகத்துவாரம்  மெத்சந்த செவன தொடர் குடியிருப்பின் 13 ஆவது மாடியில்  வசித்த, இறந்த பெண்ணின் கணவர், 5 பிள்ளைககளிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைவிட, குறித்த பெண்ணின் மிக கிட்டிய தொடர்பாளர் வட்டத்தில் இருந்த , அந்த தொடர்மாடிக்கு அருகில் உள்ள ரந்தித உயன எனும் தொடர்மாடியில்  ஒரு வீட்டில் வசித்த மேலும் 9 பேரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக  கொழும்பு மாநகர சபையின் சுகாதார  வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி கூறினார்.

இந் நிலையில் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றால் 9 மரணங்கள் பதிவகியுள்ள நிலையில், அதில் இருவர் பெண்களாவர்.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று வயோதிபா் பெண் ஒருவர் உயிரிழந்த போதும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. 

இது குறித்து யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தி  தெரிவிக்கையில்,

குறித்த வயோதிபப் பெண் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு,  கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததார். அங்கிருந்து மூன்று தினங்களுக்கு முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சயரோகம், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு போன்ற சுகயீனங்கள் காணப்பட்டது  அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.' என குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்று அதிகாலை வேளையில்  கொழும்பில்  அடையாளம் காணப்பட்ட ஏனைய மூவரில் இருவர் வெலிக்கடை பொலிஸ் பிரிவின் ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர, கொலன்னாவை - சாலமுல்ல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

 ராஜகிரிய - பண்டாரநாயக்க புர பகுதியில் எற்கனவே கொரோனா அபாயம் இருப்பதாக கருதி 50 வீடுகளில் வசிப்போர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வீடொன்றில் வசிக்கும் 50 வயதான ஒருவருக்கே  தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூச்சுத் திணறல் தொடர்பில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. 

குறித்த நபர்  போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும், அவரது நெருங்கிய தொடர்பாடல் வட்டத்தின் கீழ் உள்ள  5 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகப்புத் தரப்பினர் கூறினர்.  இதனையடுத்து ராஜகிரிய - பண்டாரநாயக்க புர பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில் கொலன்னாவை - சாலமுல்ல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் கால் உபாதை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ள நிலையில்,  அங்கு அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந் நிலையில் அவரின் நெருங்கிய தொடர்பாடல் வட்டத்துக்குள் வரும் 27 பேர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான  மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்  கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 அதன்படி இன்று மட்டும் நாட்டின் சில பகுதிகளில் இருந்து மொத்தமாக 138 பேர் இராணுவத்தின் கீழ் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக இரானுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார்.

இந் நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட  மற்றைய தொற்றாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின், கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையொன்றில் சேவையாற்றும்  ஒருவர் என  சுகாதாரத்துறையினர் கூறினர்.

 இந் நிலையில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட 4 தொற்றாளர்களில் மூவர் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான நடவடிக்கைகள் கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, இன்று பதிவான 4 தொற்றாளர்களுடன் சேர்த்து கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 152 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21