தெற்கு அதிவேக வீதியின் 73 ஆவது மைல் கல்பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து இன்று காலை 6.15 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வேன் ஒன்று விதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.