கொழும்பில் சிக்கியுள்ளவர்களில் 600 பேரை இன்று சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

05 May, 2020 | 09:19 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும்  நடவடிக்கைகளில் 2 ஆம் கட்டமாக 600 பேர்  சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.  

நுகேகொடை பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 15 பொலிஸ் பிரிவுகளில், தற்காலிக தங்கு விடுதிகளிலும், தங்குமிடங்களிலும் தங்கியுள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நுகேகொட வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி கீதால் தெரிவித்தார்.

ஏற்கனவே  முதல் கட்டமாக  மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பட்டனர்.  

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழி நடத்தலில்,  அன்றைய தினம்  காலை 7.30 மணிக்கு பேலியகொடை பகுதியில் உள்ள   விஜய குமாரதுங்க மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த 370 பேரும், காலை உணவு வழங்கப்பட்டு பின்னர் மருத்துவ  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், தொற்று நீக்கல் செய்யப்பட்டு இ.போ.ச. பஸ்வண்டிகளில் அவரவர் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர்.    

 இந் நிலையிலேயே இன்று காலை 8.00 மணிக்கு, மிரிஹானை விளையாட்டு மைதானத்தில் ஒன்று சேர்க்கப்படும் இந்த 600 பேரும் உரிய சுகாதார நடை முறைகளைக் கையாண்டு,  தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு இ.போ.ச. பஸ் வண்டிகளில் அனுப்பப்படவுள்ளனர்.

கர்ப்பிணிகள், சிறுவர்கள், நீண்டநாள் உபாதைகளால் அவதியுறுவோர்  உள்ளிட்டோர்  இவ்வாறு சொந்த இடங்களுக்கு  உள்ளடங்குகின்றனர்.  அவர்களுக்கு  வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்த பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 மிரிஹானை, மகரகம, பொரலஸ்கமுவ, வெல்லம்பிட்டிய, தலங்கம, வெலிக்கடை, நவகமுவ, முல்லேரியா, ஹோமாகம, கொட்டாவ, அத்துருகிரிய, பாதுக்க, ஹங்வெல்ல, கொத்தடுவ, மீபே ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தங்கியுள்ள 600 பேரே இன்று இவ்வாறு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

 மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்துள்ள கணிப்பீட்டின் பிரகாரம், ஊரடங்கால் சிக்கியுள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்தோர்  51868 பேர் இருப்பதாக அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11