15000 ரூபா கொடுத்த மனிதர் நான் அல்ல : அமீர்கான் விளக்கம்!

04 May, 2020 | 05:40 PM
image

கொரோனா தொற்று பரவாதிருக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15000 ரூபாய் கொடுத்த மனிதர் நான் அல்ல என்று நட்சத்திர நடிகர் அமீர்கான் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், கங்கனா ரனாவத், வித்யாபாலன் உள்ளிட்ட பல ஹிந்தி நடிகர் நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த வாரம் நடிகர் அமீர் கான் ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது. அதனை பலரும் குறைவாக மதிப்பிட்டு வாங்கச் செல்லவில்லை எனவும் ஆனால் அதற்கும் வழி இல்லாத பரம ஏழைகள் கோதுமை பக்கற்றுகளை வாங்கி சென்றனர். வீட்டுக்குச் சென்று அதனை திறந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த பக்கற்றுக்குள் 15 ஆயிரம் ரூபாய் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 

ஒரு கிலோ கோதுமை என்றால் உண்மையான ஏழைகள் மட்டுமே வாங்க வருவார்கள் என்று தீர்மானித்து, நூதன முறையில் உதவி செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் அமீர்கானுக்கு பாராட்டு குவிந்தது. 

ஆனால் இச் செய்தியும், செய்யுடன் பகிரப்பட்ட புகைப்பமும் பொய்யனது என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது குறித்து  நடிகர் அமீர்கான் தமது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,' நண்பர்களே.. கோதுமை பக்கற்றுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதர் நான் அல்ல. அது முற்றிலும் ஒரு போலியான கதை. அந்த ராபின்ஹூட் தன்னை வெளிப்படுத்த கூடாது என விருப்பப்பட்டிருக்கிறார். பாதுகாப்பாக இருங்கள்.' என பதிவிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10