மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

Published By: Digital Desk 3

04 May, 2020 | 04:03 PM
image

மட்டக்களப்பு செங்கலடி  பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவின் வட்டவானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கால்நடைகள் அடிக்கடி காணாமல் போகும் நிலமை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது.

இதனால் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளதாகவும்  இது தொடர்பாக பொலிசாரிடம்  முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் கால் நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் பிரதேச இளைஞர்கள் கால் நடை கடத்தல்காரர்களை கையும் களவுமாக  பிடிக்கும் வகையில் இரவு பகலாக ஊருக்குள் காவல் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்போது ஞாயிற்றுக்கிழமையன்று இரவு  காட்டில் மறைந்திருந்து இவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதன்போது 4 பேர் பிடிபட்டதுடன் ஏனையோர் தப்பியோடியுள்ளனர்.

களவாடப்பட்ட 6 மாடுகள் மற்றும் களவிற்கு பயன்படுத்திய வாகனம் போன்றவற்றினை இன்று திங்கட்கிழமை கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31