கொட்டகலையில் மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை !

Published By: Digital Desk 3

04 May, 2020 | 03:37 PM
image

திம்புள்ள  - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.

நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே அதாவது அதிகாலை 1.30 மணியளவிலேயே குறித்த மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட மதுபான போத்தல்களை, பெட்டியில் போட்டுக்கொண்டு மதுபான சாலைக்கு அருகில் இருந்த குறுக்கு வழியொன்றின் ஊடாக இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச்செல்லும் வேளையில், அவ்வழியில் இருந்த வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரீவி கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடொன்றின் மதில் மீது ஏறி தப்பிச்செல்ல முற்படும் காட்சிகள் விளங்கினாலும், மின் விளக்கின் எதிர்திசை ஒளி காரணமாக நபர்களின் முகங்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை திம்புள்ள - பத்தன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04