இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி - பொலிவியாவில் சம்பவம்

04 May, 2020 | 02:56 PM
image

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில்  இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானப்படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிவியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிரினிடாட் நகரில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிலரை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ விமானம் ஒன்றே கடந்த சனிக்கிழமை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில், ஸ்பெயின் நாட்டினர் 4 பேரும், விமானி உள்பட 2  வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

விபத்துக்குள்ளாகியுள்ள பீச் கிராஃப்ட் பரோன் பி -55 என்ற இலகுரக விமானம் இயந்திரம் செயலிழந்ததால் விமானம் புறப்பட்டு 12 நிமிடங்களுக்குப் பிறகு டிரினிடாட்டில் உள்ள விமான நிலையத்திற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக விமானி தெரிவித்ததாகவும் அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

பொலிவியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக இராணுவம் இறக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 1,500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியும் 71 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13