மஹர சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றது எவ்வாறு ? - சம்பவத்தை விபரிக்கிறார்  சிறைச்சாலை அத்தியட்சர்

Published By: Digital Desk 3

03 May, 2020 | 09:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடவத்தை - மஹர சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்பிக்க முயன்ற போது, அவர்களில் ஒருவர் மதிலில் இருந்து கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மனியளவில் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

குறித்த கைதியுடன் மேலும் 8 பேர் தப்பியோட முயன்றுள்ளதாகவும் இதன்போது, சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் கடும் போராட்டம் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் காயமடைந்த இரு சிறை காவலர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் அறிய முடிவதாவது,

'மஹர, புதுக் கடை, அத்தனகல்ல உள்ளிட்ட நீதிமன்றங்களினால்  விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதிகள் சிலர் இன்று அதிகாலை  சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். போதைப் பொருள் குற்றச்சாட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக மஹர சிரைச்சாலை அத்தியட்சர்  ஜகத் வீரசிங்க கூறினார்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையறையின் ஓர் பிரிவின்  கூண்டின் கம்பிகளை அறுத்து, வெளியே வந்து,  ஆடைகளைக் கொண்டு தயார்ச் எய்யப்பட்ட கயிற்றை, மாட்டல் ஒன்ரின் உதவியுடன் 20 அடி வரை உயரமான சிறைச்சாலை மதில் மீது தப்பிச் செல்லவே அவர்கள் முயன்றுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை பாதுகாப்பு கூடாரத்தில் கடமையில் இருந்த  காவலர் அதனை அவதானித்து அவர்களை  கட்டுப்படுத்த  வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

அந்த சப்தத்தில் ஏனைய காவலர்களும் , தப்பிச் செல்ல முயன்றுகொன்டிருந்த கைதிகளை நோக்கி ஓடியுள்ளார். இதன்போது ஒருவர்  மதில் வழியே ஏறிக்கொன்டிருந்துள்ளார்.

இடை நடுவே, ஆடைகளைக் கொண்டு தயார்ச் செய்யப்ப்ட்டிருந்த கயிறு அறுந்து விழ, அந்த கைதி சிறை வளாகத்துக்குள்ளேயே விழுந்து படு காயமடிந்துள்ளார். ஏனைய கைதிகளை அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் கடும் மல்லுக்கட்டல்களுக்கு மத்தியில் பிடித்துள்ளனர்.

கயிறு அறுந்தமையால்  கீழே வீழ்ந்த கைதி ராகம  வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர்  உயிரிழந்துள்ளார்.  கடவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதான முன்னாள் கடற்படை வீரர் ஒருவரெ இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில்,  தற்போதைய தொற்று சூழலில் முதலில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைச் செய்த பின்னர் இன்று பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படும் என  ராகம வைத்தியசாலை பனிப்பாளர் வைத்தியர் ஷெல்டன்  பெர்ணான்டோ கூறினார்.

கைது போராட்டத்தின் போது காயமடைந்த சிறை அதிகாரிகள் இருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08