இரு நாட்களாக தேடப்பட்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு - முல்லைத்தீவில் சம்பவம்

Published By: J.G.Stephan

03 May, 2020 | 05:09 PM
image

முல்லைத்தீவு - கரும்புள்ளியான் பகுதியிலிருந்து 23 வயதுடைய இளைஞரொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான்  பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் றொசாந்தன் என்கிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை  தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடியபோது அவர் இன்று (03-05-2020) காலை அவருடைய கிணற்றிலிருந்து சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த இளைஞன் சிறுவயதிலேயே தன்னுடைய தந்தை தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய  தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில்  அவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது இன்று காலை அவர்கள் கிணற்றுக்கு நீர் எடுப்பதற்காக சென்றபோது கிணற்றினுள் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த மாங்குளம்  பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38