எகிப்திய ஜனாதிபதியை கேலிசெய்த குற்றத்தில் சிறைவாசம் அனுபவித்த திரைப்பட தயாரிப்பாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Published By: Vishnu

03 May, 2020 | 05:03 PM
image

எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசியை கேலி செய்து, ஒரு காணொளிக் காட்சியை தாயரித்தமைக்காக விசாரணைகளின்றி இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந் நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

எகிப்தின், கெய்ரோவிலுள்ள டோரா என்ற சிறைச்சாலை வளாகத்திலேயே ஷேடி ஹபாஷ் என்ற குறித்த திரைப்பட தயாரிப்பாளர் உயிரழந்துள்ளதாக, அவரது சட்டத்தரணி அஹமட் எல்-குவாகா சனிக்கிழமை தெரிவித்தார். 

ஷேடி ஹபாஷின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்பட தெரிவிக்கப்படவில்லை.

எனினும் ஹபாஷின் உடல் நிலை பல நாட்களாக பாதிப்படைந்திருந்தாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வெள்ளிக்கிழமை மாலை சிறைக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து அன்றிரவே அவர் உயிரிழந்து விட்டதாகவும் குவாகா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இவரது மரணம் குறித்து எகிப்தின் சிறைச்சாலை நடவடிக்கைகளை பார்வையிடும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஷேடி ஹபாஷ் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் படைகளினால் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52