முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினது சடலங்களும் தகனம் !

Published By: J.G.Stephan

03 May, 2020 | 08:48 AM
image

முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் (01.05.2020) உயிரிழந்த கொழும்பு குணசிங்கபுரவை சேர்ந்த  இரண்டு முதியவர்களினதும் சடலம்  நேற்று (02.05.2020) இரவு முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்யப்பட்டது.



முன்னதாக முள்ளியவளை குமாரபுரம் பகுதியில்  உள்ள  மயானம் ஒன்றில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யபட்ட முதியவர் ஒருவரது சடலம் தகனம் செய்வதற்கு மேற்கொள்ள பட்ட முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்பால் கைவிடப்பட்டு,  நீண்ட இடைவெளியின் பின்னர் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்ய முள்ளியவளை பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த மற்றைய முதியவரின் மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு கொரோனா தொற்று உறுதி செய்வதற்கான பரிசோதனை மேற்கொள்ளபட்டநிலையில் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்றமையால் நீதிமன்ற உத்தரவை பெற்று உயிரிழந்த மற்றைய முதியவரின் சடலமும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது பொலிஸார் ,இராணுவம் ,சுகாதார வைத்திய அதிகாரி , சுகாதார பரிசோதகர்கள் கிராம அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் சடலங்கள் நேற்றிரவு 11.30 மணியளவில் தகனம் செய்யபட்டது . 

உயிரிழந்த இருவரும் கொழும்பில் யாசகம் பெற்று வாழ்க்கை நாடாத்தி வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38