முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

02 May, 2020 | 09:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முல்லைதீவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு வயோதிபர்கள்  உயிரிழந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா  இல்லை என முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது உறுதியாகியுள்ளது.  

இந் நிலையில் மற்றையவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் இன்று இரவு 7.00 மணி வரை கிடைக்கப் பெற்றிராத நிலையில், அவரது பி.சி.ஆர். முடிவும் கிடைக்கப்பெற்ற பின்னர் பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டு மரணத்துக்கான காரணம் வெளிப்படுத்தப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான்  விஜேசிங்க விரகேசரிக்கு தெரிவித்தார்.    

அண்மையில் புறக்கோட்டை - குணசிங்கபுர பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட யாசகர்கள் உள்ளிட்ட குழுவில் உள்ளடங்கிய இருவரே நேற்று உயிரிழந்திருந்தனர்.  நேற்று காலை ஒருவரும் மாலை ஒருவரும் உயிரிழந்ததாகவும், அவர்களின் சடலங்கள் மேலதிக பி.சி.ஆர். மற்றும் பிரேத பரிசோதனைகள் தொடர்பில் முள்ளியவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  தெரிவித்திருந்தார். 

இவர்களில் காலை நேரத்தில் உயிரிழந்த நபரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்  மட்டுமே  இச்செய்தி எழுதப்படும் போதும் கிடைக்கப் பெற்றிருந்தது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.

 கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கும் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், முல்லைத்தீவில் விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கெப்டன் ஏ.என்.விஜேசிறிவர்தனவின் மேர்பார்வையில் உள்ள  தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, கொழும்பு புறக்கோட்டை - குணசிங்கபுர பகுதியில் இருந்து ஒன்று சேர்க்கப்பட்ட மக்கள்  அழைத்து செல்லப்பட்டனர். யாசகர்கள், கூலித் தொழிலாளிகள் மற்றும்  ஆதரவற்ற முதியவர்களென பலரும் அதில் உள்ளடங்கியிருந்தனர்.  அவர்கள் அங்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47