வடகொரிய ஊடகம் வெளியிட்ட படங்கள் கிளப்பும் முக்கியமான கேள்வி

Published By: Priyatharshan

02 May, 2020 | 06:01 PM
image

வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான கொரிய மத்திய செய்திச்சேவை சனிக்கிழமை வெளியிட்ட படங்கள் சுமார் மூன்று வார காலத்துக்குப் பிறகு ஜனாதிபதி கிம் ஜொங் உன் முதற்தடவையாக பகிரங்கத்தில் வந்திருப்பதை காண்பிக்கின்ற போதிலும், அவர் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த 20 நாட்களிலும் அவர் சுகவீனமுற்றிருந்தார் என்பதற்கான ஒரு சிறு தடயத்தையும் வெளிப்படுத்துவதாக இல்லை எனறு அவதானிகள் கூறுகிறார்கள். 

அண்மைய வாரங்களில் கிம்மின் உடல்நலம் குறித்து உலகம் பூராவும் கிளம்பியிருந்த ஊகத்துக்கான தடயத்தை கண்டறிய அவர் தலைநகர் யொங்யாங்கிற்கு வடகிழக்கே உரத்தொழிற்சாலையொன்றுக்கு விஜயம் செய்ததைக் காண்பிக்கும் படங்களில் எதாவது தடயம் இருக்கிறதா என்பதை அறிய அவதானிகள் அவற்றை துருவிப்பார்த்திருக்கிறார்கள்.

அவர்கள் அவதானித்த 5 விடயங்கள் வருமாறு ; 

♦ கிம்மின் தோற்றம்

36 வயதான கிம் 2011 ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரின் உடல் எடை கணிசமானளவுக்கு அதிகரித்திருந்தது. அவர் சுகவீனமுற்றிருந்தால் நிச்சயமாக எடை குறைந்திருக்கும். ஆனால், படங்களில் எடை குறைந்திருப்பதற்கான எந்த அடையாளத்தையும் காணக்கூடியதாக இல்லை. அவர் மாவோ பாணி உடையை அணிந்திருப்பதுடன் புதிதாக சிகையலங்காரம் செய்திருப்பது போலவும் தெரிகிறது.

வடகொரியாவின் தாபகரான தனது பேரனார் கிம் இல் - சுங்கின் பிறந்த தினக்கொண்டாட்ங்கள் ஏப்ரில் 15 நடைபெற்றவேளை அதில் கிம் கலந்துகொள்ளாததை அடுத்து அவர் பற்றிய ஊகங்கள் கிளம்பலாயின. இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளான கிம் கடுமையான சுகவீனமடைந்திருப்பதாக தங்களுக்கு கூறப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சர்வதேச ஆய்வுகளுக்கான மிடில்பெரி நிறுவனத்தில் கிழக்காசியாஅணுவாயுதப்பரவல் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளராக இருக்கும் ஜெவ்றி லெவிஸ் செயதிருக்கும் ருவிட்டர் பதிவொன்றில், " நல்லது.கிம் ஆரோக்கியமானவராகக் காணப்படுகிறார் எனாறு நான் சொல்லமாட்டேன்.ஆனால், அவர் இறக்கவில்லை என்பது மாத்திரம் நிச்சயமானது " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

♦ கிம்மின் பரிவாரம்

சன்ஷொன் உரத்தொழிற்சாலைக்கு கிம் செய்த விஜயத்தின்போது எடுக்கப்பட்டதாகக்கூறப்படுகின்ற படங்கள் பலவற்றில் அவருக்கு நெருக்கமாக நிற்பவர்களில் இளைய சகோதரி கிம் ஜோ யொங்கும் ஒருவர்.தலைவரின் விருப்பத்தை வெளிக்காட்டுவதற்காக அத்தகைய நெருக்கத்தை வடகொரிய பிரசார சாதனங்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றன.அதேவேளை, கிம்முக்குப் பிறகு சகோதரியே அதிகாரத்துக்கு வருவார் என்று உலகம்பூராகவும் பேசப்பட்டதனால் அவருடனான கிம்மின் நெருக்ககம் பாதிக்கப்படவில்லை என்றுகாட்டுவதற்காகவும் அந்தப்படம் வெளியிடப்பட்டிருக்கலாம்.

 ♦ முகக்கவசம்

 கிம்மின் பரிவாரங்களில் குறைந்தது ஒரு உறுப்பினராவது முகக்கவசம் அணிந்திருக்கக் காணப்பட்டமை கொவிட் - 19 வைரஸ் தொற்றுநோய் வடகொரியாவில் இன்னமும் அக்கறைக்குரிய ஒன்விளங்குகிறது என்ற செய்திகளை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது.

   தனது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்றியதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கிம் சுயமாகவே தொற்றுத்தடுப்பு காவலில் இருந்துவந்ததாக தென்கொரிய தலைநகர் சியோலில் இருந்து வெளியாகும் ' ஜூங் ஆங் ' என்ற செய்திப்பத்திரிகை கடந்தவாரம் அறிவித்தது.

   மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து இருப்பதாக ஜனவரியில் சீனா அறிவித்ததை அடுத்து வடகொரியா அதன் எல்லைகளை மூடியது.வடகொரியாவில் வைரஸ் எவருக்கும் தொற்றியிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று கிம் ஆட்சி கூறியது.

  ♦ கொல்ஃப் வண்டி

   படங்களில் கிம்முக்கு பின்னால் காணப்படுகின்ற பச்சைநிற கொல்ஃப் வண்டி அவதானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.2014 அக்டோபரில் சுமார் 6 வாரங்கள் கிம் காணாமல் போய் பிறகு வெள்ளைப் பிரம்பை கையில் வைத்துக்கொண்டு நடந்துவந்து பகிரங்கத்தில் காட்சியளித்தபோது அதேபோன்ற கொல்ஃப் வண்டியொன்றும் காணப்பட்டது.

   மறுபுறத்தில், உரத் தொழிற்சாலை வளாகம் மிகவும் பரந்தது என்பதால் அதைச் சுற்றிப்பார்வையிட ஒரு வண்டி நிச்சயம் தேவை.கடந்த வருடம் யொங்யாங்கிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மேற்கொண்ட விஜயத்தின்போது அவருக்கு கிம் அதேபோன்ற வண்டியொன்றைக் கொடுத்தார்.

 ♦ வெள்ளைத்தடி 

   கிம்முடன் படங்களில் காணப்படும் அதிகாரிகளில் ஒருவர் மெல்லிய வெள்ளைத்தடி ஒன்றைக் கையில் வைத்திருக்கிறார்.முதலில் அதை பிரம்பு என்றே பலரும் நினைத்தார்கள்.இன்னொரு படத்தில் தொழிற்சாலையைப் பற்றிய விளக்கங்களை அளிக்கும்போது அதிகாரி அந்த தடியை பயன்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

   இந்த தொழிற்சாலையின் நிர்மாணம் செய்மதி ஆய்வுகளின் ஊடாக பல வருடங்களாக மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறது.வடகொரியா அதன் ஆயுதங்களுக்காக  "மஞ்சள் கேக்" யூரேனியத்தை உற்பத்தி செய்வதற்காக இரட்டை வசதியாக இந்த தொழிற்சாலையை பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது.

   வடகொரியா அதன் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய விபரங்களை ஔிப்பதற்காக படங்களில் மாற்றங்களைச் செய்யும் வரலாறு ஒன்றைக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

( புளூம்பேர்க் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04