வெனிசுலா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழப்பு!

Published By: Vishnu

02 May, 2020 | 05:27 PM
image

வெனிசுலாவின், குவானாரே சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 17 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட வெனிசுலாவின் இராணுவ அறிக்கையில், 

வெளிசுலாவின் குவானாரேயினல் உள்ள லாஸ் லானோஸ் சிறைச்சாலையில் கைதிகளிடத்தில் பொது ஒழுங்கானது சீர் குலைந்தமையினால் இந்த கலவரம் ஏற்பட்டுள்ளளது.

இதன் விளைவாக 17 பேர் உயிரிந்துள்ளதுடன், ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலவரத்துக்கு இராணுவம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. எனினும் கைதிகளின் உரிமைக் குழுவினர், கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் உணவு கொண்டு வருவதற்கு தடை விதித்தன் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரேனா வைரஸ் பரவலின் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாகவே இவ்வாறு சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

கைதிகளுக்கான போதுமான தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லை என கூறியுள்ள வெனிசுலா சிறைச்சாலையின் அதிகாரிகள், அவர்களில் பெரும்பாலானோர் ஊட்டச் சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் காசநோய் கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

கலவரத்தின் பின்னர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலிலிருந்து கைதிகள் வெளியேற முயன்றபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை இயக்குனர் முதுகில் காயமடைந்த நிலையிலும் மற்றும் கையெறி குண்டுவெடிப்பால் காயமடைந்த ஒரு லெப்டினென்ட் ஆகியோர் அடங்குவர்.

இதேவேளை இந்த அனர்த்தத்தில் வெனிசுலா சட்டமன்ற உறுப்பினர் மரியா மார்டினெஸ் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Photo Credit : twitter

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52