பாடசாலைகளில்  டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் பணிப்பு

02 May, 2020 | 02:32 PM
image

(எம்.மனோசித்ரா)

மூடப்பட்டுள்ள பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு இது தொடர்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இது வரையில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார்.

பாடசாலை மற்றும் ஏனைய கல்வி ஸ்தானங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி ஸ்தாபனங்களின் அதிகாரிகள் மற்றும் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி பாடசாலை அபிவிருத்தி குழு இ பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய கல்வி பணிமனைகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அனைத்து வகையான சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22