நீண்ட நாட்கள் முடக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படும் சில நாடுகள் !

Published By: Digital Desk 3

02 May, 2020 | 01:14 PM
image

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று அச்சம் தொடரும் சூழ்நிலையில், நீண்ட நாட்களாக பல நாடுகள் முடக்கப்பட்டு செயலிழந்து போயுள்ளன. இந்நிலையில் சில நாடுகள்  வணிக நடவடிக்கைக்களுக்காக மீண்டும் மெதுவாக சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய திறக்கப்படுகின்றன.

சீனா

உலகிலேயே மத்திய சீனா கொரோனா அச்சுறுத்தலால் பூட்டப்பட்ட முதல் நாடு. இப்போது, குறைந்த ஒற்றை இலக்கங்களில் அதன் தினசரி நோய்த் தொற்றாளர்களை கொண்டுள்ளதால், நகரங்கள் தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கின்றன.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த பீஜிங்கின் தடைசெய்யப்பட்ட நகரம்  மீண்டும் திறக்கப்படுகின்றன.

இருப்பினும், தினசரி வருகை தருபவர்களின் அளவு மற்றும் சுகாதார சோதனைகள் போன்ற சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அமெரிக்கா:

இந்த வார இறுதிக்குள் அனைத்து மாநிலங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை ஓரளவு மீண்டும் திறக்கப்பட்டிருக்கும், இருப்பினும் சில புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒற்றை நாள் அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளன.

இந்தியா:

1.3 பில்லியன் மக்களை பாதிக்கும் நாடு தழுவிய ஊரடங்கு முதலில் மே 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மே 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மூன்று வாரங்களில் புதிய நோய் தொற்றாளர்கள் இல்லாத சில குறைந்த ஆபத்துள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா

திட்டமிட்டதை விட முன்னதாக நாடு தழுவிய பூட்டுதலை எளிதாக்குவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

"நாங்கள் அவுஸ்திரேலியாவை முடக்கலின் கீழ் வைத்திருக்க முடியாது, நாங்கள் முன்னேற முடியும்" என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மலேசியா

பெரும்பான்மையான வணிக நிலையங்களை திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க மலேசிய அனுமதித்துள்ளது. சினிமா தியேட்டர்கள் அல்லது இரவு விடுதிகள் போன்ற நெருங்கிய தொடர்புகளை உள்ளடக்கியவை மூடப்பட்டிருக்கும்.

இலங்கை

இலங்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 ஆம் திகதி திங்கள் முதல் ஆரம்பமாகும்.

இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும். சேவைகளின் தேவையை கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52