தாய்நாட்டு மக்களுக்காக அஸார் அலியின் துடுப்பு மட்டை, ஜேர்ஸி ஏலத்தில்

02 May, 2020 | 01:44 PM
image

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிராக உதவும் வயைில் சம்பியன்ஷிப் தொடரின்போது பயன்படுத்திய ஜேர்ஸி, டெஸ்ட் அரங்கில் முச்சதம் குவித்த துடுப்பாட்ட மட்டை ஆகியவற்றை ஏலம் விடுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அஸார் அலி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் அஸார் அலி பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது முச்சதத்தை அடித்தவாராக விளங்குகிறார். இவர் இதை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அடித்திருந்தார்.

அத்துடன் 2017 இல் பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணம் வென்றிருந்த அணியில் அங்கம் வகித்த அஸார் அலி, பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றிருந்த அனைவரும் கையொப்பமிட்டிருந்த தனது ஜேர்ஸியை ஏலத்தில் விட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட்-19 காரணமாக இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தனது தாய்நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக குறித்த துடுப்பாட்ட மட்டை மற்றும் ஜேர்ஸியை ஏலத்தில் விட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'நான் எனது மிகவும் நெருங்கிய தொடர்புடைய இரண்டு உடமைகளை கொரோனா பாதிப்புக்க எதிராக உதவுவதற்காக ஏலத்தில் விட இருக்கிறேன். இவற்றுக்கு ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபாவை ஆரம்ப தொகையாக அறிவித்துள்ளேன்' என்றார்.

இவர் மேலும் குறிப்பிடுகையில், “'இந்த பொருட்கள் இரண்டும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான பொருட்கள். ஆனால், இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் இவை பயன்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31