புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பந்தோட்டையினூடாக பொதுவில் வரையான கடற் பிரதேசஙகளில் இன்று கடல் கொந்தளிப்புகள் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய கடற் பிரதேசங்களில் ஓரளவு கொந்தளிப்புகள் ஏற்படுவதுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்களும் கடற் பிரதேசங்களை அண்டி வாழ்வோரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு  பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.