நாவலப்பிட்டி முன்னாள் நகர சபைத் தலைவருக்கு விளக்கமறியல்!

Published By: Vishnu

01 May, 2020 | 05:35 PM
image

ஹட்டன், கினிகத்தேனை பகுதியில் கைதான முன்னாள் நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சுற்றி வளைப்பின்போது மேலும் சிலர் தப்பியோடியுள்ள நிலையில் சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவர்களை மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அவர்களை பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38