வெசாக் தினம் குறித்து மக்களுக்கு, சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!

Published By: J.G.Stephan

01 May, 2020 | 04:35 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வெசாக் வலயங்கள் அமைத்தல், தானசாலைகள் அமைத்தல் மற்றும் வெசாக் தோரணங்களை காட்சிப்படுத்தல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் அச்சசுறுத்தல் காரணமாக இம்முறை வெசாக் உற்சவத்தை வேறு முறைமையில் கொண்டாட வேண்டியிருக்கிறது. அதற்கான ஆலோசனைக் கோவை சுகாதார அமைச்சினால் அனைத்து பௌத்த மதத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெசாக் வலயங்கள், தானசாலைகள், வெசாக் தோரணங்கள் காட்சிப்படுத்தல் உள்ளிட்ட மக்கள் ஒன்று கூடக் கூடியவாறான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு வெசாக் தினத்தில் தேவையற்ற முறையில் வீடுகளிலிருந்து வெளிச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி தெரிவித்துள்ளமைக்கமைய, விகாரைகளில் சமூக இடைவெளியைப் பேண முடியாதவாறு மக்களை ஒன்றிணைந்து பூஜை வழிபாடுகளை நடத்துவதை தவிர்த்துக் கொள்ளவும். இவற்றை மக்களை வீடுகளிலிலேயே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். அத்தோடு வெசாக் கூடுகளை வீடுகளில் தொங்க விடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அத்தோடு சமூக இடைவெளியை பேணும் வகையில் அனைத்து வர்த்தகர்களும் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04