எகிப்தில் கவச வாகனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல இராணுவத்தினர் பலி!

Published By: Vishnu

01 May, 2020 | 03:56 PM
image

எகிப்தின், சினாய் பகுதியில் இராணுவ கவச வாகனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலானது வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலியானவர்களில் இரண்டு அதிகாரிகளும், எட்டு இராணுவ வீரர்களும் உள்ளடங்குவதாக தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், காயமடைந்தவர்களின் விபரங்களை குறிப்பிடவில்லை.

இஸ்லாமிய புனித ரமழான் மாதத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

2013 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மொஹமட் மோர்சியை அதிகாரத்திலிருந்து இராணுவத்தினர் நீக்கியதையடுத்து சினாயில் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன. 

குறித்த வன்முறைச் சம்பங்களை கட்டுப்படுத்துவதற்கு பல ஆண்டுகலாக பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.

சீனாய் பிராந்தியத்தை மையமாக கொண்டு, 2018 பெப்ரவரியிலிருந்து எகிப்திய பாதுகாப்பு படையினர் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவ புள்ளி விபரங்களின்படி 60 க்கும் மேற்பட்ட படையினரும், 845 க்கும் மேற்பட்ட போராளிகளும் குறித்த பகுதியில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52