சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன்

01 May, 2020 | 12:44 PM
image

(எம்.நியுட்டன்)

தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள்  முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான சாலைகளும் பூட்டப்பட்டு இருப்பதன் காரணமாக தென்மராட்சிப் பகுதியில் அதாவது மட்டுவில் கெடுடாவில்  மறவன்புலவு சரசாலை போன்ற கிராமங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் மறைவானபற்றைகளுக்குள்ளும் ஆட்கள் இல்லாத வீடுகளிலும்கசிப்பு உற்பத்தி பெருமளவில் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனினும் இது தொடர்பில் நாம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிசாரினாலும் பெருமளவு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்படுகின்றார்கள்.

 

எனினும்  அது இன்றுவரை முற்றாக நிறுத்தப்படவில்லை எனவே இந்த கசிப்பு உற்பத்தியினை நிறுத்துவதற்கு தென்மராட்சி இளைஞர்கள் பொலிசாருடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த கசிப்பு உற்பத்தியினைதென்மராட்சியில் முற்றாக ஒழிக்க முடியும்.

 மேலும் நேற்று முன்தினம்  பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது கசிப்பு உற்பத்தி நிறுத்தக்கோரி ஒரு பிரதேச சபை உறுப்பினரால் விசேடபிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்பட்டிருந்தது.

  அன்றிரவு அவரது வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களினால் அவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளமைக்கும் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார்  இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08