எலும்பியல் வைத்தியசாலையில் திடீர் விபத்துகள், அவசர சிகிச்சைகள் மாத்திரே மேற்கொள்ளப்படும்

Published By: J.G.Stephan

30 Apr, 2020 | 09:50 PM
image

(செ.தேன்மொழி)

கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் கொழும்பு எலும்பியல் வைத்தியசாலையில் திடீர் விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சையை மாத்திரே மேற்கொள்வதாகவும், ஏனைய சிகிச்சைகளை தற்காலிகமாக தடுத்துவைக்க உள்ளதாகவும் எழும்பியல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். டப்லியூ. எல்.எல்.யூ.சி.குமாரதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது,

எலும்பியல் வைத்தியசாலை கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் இடர்வலயமாக அறிக்கப்பட்டுள்ள பகுதியிலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுவது அவசியமாகும்.

அதற்கமைய செயற்பட்டால் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் 100 நோயாளர்களை மாத்திரமே வைத்திருக்க முடியும்.

அதனால் வழமை போன்று வெளிநோயாளர்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சிக்கல் ஏற்படுவதினால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் திடீர் விபத்துகளால் ஏற்படும் எலுப்பியல் சிகிச்சை மற்றும் எலும்பு தொடர்பான அவசர சிகிச்சைகளை மாத்திரமே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் எலும்பியல் சிகிச்சைகள் வழமைபோன்றே இடம்பெறும்.

இதேவேளை நோயாளர்கள் அவர்களுக்கு அவசியமான சேவை மற்றும் ஒளடதங்களை பெற்றுக் கொள்வதற்காக 011-2693911 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

 

அதேவேளை எலும்பியல் சிகிச்சை தொடர்பில் பொதுமக்கள் அவர்களுக்கு அவசியமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக நேற்று எலும்பியல் வைத்தியசாலையினால் வெளியிடப்பட்ட தொலைபேசி இலக்கம்  தவறானது என்பதினால், 011-3618678 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொண்டு மக்கள் அவர்களுக்கு அவசியமான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09