சட்டத்தரணி ஹிஜாஸ் கைது : இரு ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் ஆஜராக சட்டமா அதிபருக்கு மேன் முறையீட்டு மன்று அறிவித்தல்

Published By: J.G.Stephan

30 Apr, 2020 | 09:17 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை  உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்த,  உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்த, பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராக இன்று மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பியது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க, தேவிகா அபேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில்  பரிசீலனைக்கு வந்தது.





சட்டத்தரணி சனத் விஜேவர்தன மற்றும்  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்  ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா,  சாலிய பீரிஸ் உள்ளிட்ட 5 ஜனாதிபதி சட்டத்தரணிகளும் மேலும் 30 இற்கும் அதிகமான சட்டத்தரணிகளும்  மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராக முற்பட்டனர். இதன்போது தற்போதைய சூழ் நிலையைக் கருத்திக் கொன்டு  அவர்களில்  சிலருக்கு மட்டுமே மன்றில் ஆஜராக மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்தது.

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன,  சி.ஐ.டி. பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் இவ்வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைதுசெய்தமை சட்டத்துக்கு முரணானது எனவும்,  அவரை உடனடியாக கைதிலிருந்து  நீதிமன்ற்ல் ஆஜர் செய்ய உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து எந்த சட்டவாதியும் மன்றி்ல் ஆஜராகவில்லை.  எனினும் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள், தாம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்களை நேரடியாக கையாளுவதற்காக குறிப்பிட்டுள்ளனர்,

இந்நிலையில் சட்ட மா அதிபருக்கு இது குறித்து ஆஜராக மீள அறிவித்தல் பிறப்பித்த மேன் முறையீட்டு நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08