தேர்தல் குறித்த தீர்மானங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவே முன்னெடுக்க வேண்டும் - பந்துல

Published By: Vishnu

30 Apr, 2020 | 06:02 PM
image

(ஆர்.யசி)

கடந்த காலங்களில் டெங்குநோய் காரணமாக 500. 600 பேர் உயிரிழந்த நிலையிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக இப்போது ஏழுபேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என கூறும் அமைச்சரை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கொரோனா வைரஸ்சினால் பாதிக்கப்பட்ட இறுதி நபர் குணமடையும் வரையில் தேர்தலை நடத்தக்கூடாதென்றால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தேர்தலை நடத்த முடியாது எனவும் கூறுகின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைக் கூறினார். 

அதேபோல் தேர்தல் நடத்தப்படுவது குறித்து தீர்மானங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவே முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் தீர்மானம் எடுப்பதும் இந்த நாட்டின் சுகாதார தன்மைகள் மக்களின் பாதுகாப்பு குறித்து சுகாதார அதிகாரிகள், வைத்தியர்கள் கூறும் தீர்மானங்களுக்கு அமையவேயாகும். 

ஆகவே இது குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கோ அல்லது அமைச்சரவைக்கோ தனித் தீர்மானம் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை அறிவிக்கவோ முடியாது.

எமது எதிர்பார்ப்பும் நாளைய தினமே அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட்டு இந்த நோய் இல்லாது போய் வழமையான நிலைமைகள் உருவாக வேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறோம்.

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றோம்.

இப்போது தேர்தலை நடத்துவது அல்ல எமது நோக்கம், முதலில் மக்களை பாதுகாக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் கூறும் நிலைப்பாட்டிற்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01