நல்லாட்சியில் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்ட அரச தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை - ரோஹித அபேகுணவர்தன

30 Apr, 2020 | 05:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்ட அரச தலைவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை  எடுக்கப்படும்.

பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பல விடயங்கள் வெறுக்கத்தக்க விதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்தரப்பினர் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இன்று முதல் ஜனாதிபதிக்கு நிதி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என முன்னாள்  நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். புதிய பாராளுமன்றம் கூடும் வரையில் நிதி அதிகாரத்தை பயன்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்தரப்பினர் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தை இன்று சவாலுக்குட்படுத்துகின்றார்கள்.

அரசியலமைப்பினை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அக்கடித்த்தில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளிப்படுத்தினார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலமைப்பினை மீறியவர்கள் எதிர்காலத்தில் தண்டிக்கப்படுவார்கள். கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒருபோதும் மீண்டும் கூட்டப்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47