போட்டிகளை நடத்தாமல் கைவிடுவதற்கு பிபா யோசனை!

Published By: Vishnu

30 Apr, 2020 | 05:49 PM
image

சம்பியன்ஸ்  லீக் தொடரை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கால்பந்தாட்ட லீக் போட்டிகளை நடத்தாமல் விடுவதற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) மருத்துவ குழுத் தலைவர் மிஷேல் டி ஹுகே யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

ஐரோப்பிய லீக், லா லிகா, சீரி ஏ லீக், பிரிமீயர் லீக், பண்டஸ்லிகா என ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கிடையிலான கால்பந்து போட்டிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலால் பாதியிலேயே நிற்கின்றன. எஞ்சிய போட்டிகளை மீண்டும்  ஆரம்பிப்பதற்கு ஒரு சில கால்பந்து சம்மேளனங்கள் முயற்சித்து வருகின்றன. எனினும், அவை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே.

இது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) மருத்துவ குழுத்தலைவர் மிஷேல் டி ஹுகே கூறுகையில்,  "கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருவதால் எதிர்வரும் நாட்களில் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை. இப்போது கால்பந்தாட்டப் போட்டிகளை மீண்டும் ஆரம்பித்தால் அது மிகப்பெரிய  ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த பருவக்காலத்துக்கான எஞ்சியுள்ள போட்டிகளை இத்துடன் தவிர்த்து விட்டு, அடுத்த புதிய பருவக்காலத்துக்கான போட்டிகளை சிறந்த முறையில் ஆரம்பிப்பதற்கு தயார்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் விளையாட முடிவு எடுப்பதற்கு முன்னர், ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49