அணித் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு கிடைத்ததாக டிவில்லியர்ஸ் தகவல்

30 Apr, 2020 | 04:36 PM
image

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின்  தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு தனக்கு அழைப்பு கிடைத்தது என தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரரான ஏ.பி. டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சகல வகையா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவரது விருப்பத்தை தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நிராகரித்தது.

தற்போது தென்ஆபிரிக்க கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வணியின் புதிய பயிற்றுநராக பொறுப்பேற்றுக்கொண்ட மார்க் பவுச்சர்,  ‘டிவில்லியர்ஸ் சிறந்த ஆட்டத்திறனை நிரூபித்தால் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக இருபது 20 தொடரின் தென் ஆபிரிக்க அணித் தெரிவில் கருத்தில் கொள்ளப்படுவார்’ என தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில்,

“தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க தான் செய்கிறது. மேலும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபையும் அணித்தலைமை பொறுப்பை மீண்டும் வகிக்க முடியுமா? என்று கேட்டிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தென் ஆபிரிக்க அணிக்கு நான் திரும்ப வேண்டுமென்றால் உயர்வான ஆட்டத்திறனில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் அணியில் இருக்கும் ஏனைய வீரர்களை விட நான் சிறப்பாக இருக்க வேண்டியதும் அவசியமானதாகும். அணியில் இடம் பெறுவதற்கு தகுதியான ஆட்டத்திறனில் இருப்பதாக நான் உணர்ந்தால் தான், விளையாடும் பதினொருவர் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு என்னால் எளிதாக வர முடியும்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியில் நான் சிறிது காலம் இடம் பெறவில்லை. எனவே, தென் ஆபிரிக்க அணியில் இடம் பெற நான் இன்னமும் தகுதியானவர் என்பதை நானும், ஏனையவர்களும் உணர வேண்டியது முக்கியமானதாகும். தற்போது நம்மை சுற்றி கொரோனா வைரஸ் பிரச்சினை  காணப்படுகிறது.

எனவே வருங்கால போட்டி அட்டவணையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை”இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41