பொதுக் கட்டிடங்களில் கொரோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் : டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி

Published By: J.G.Stephan

30 Apr, 2020 | 09:45 AM
image

நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜயபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்துள்ளார்.



நாடாளாவிய ரீதியில் படைத் தரப்பினரினால் பொது கட்டிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (29.04.2020) அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊடங்கு சட்டம் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் துரதிஸ்ட வசமாக எதிர்காலத்தில்  சமூகப் பரவலாக மாற்றமடையுமாயின், ஒவ்வொரு பிரதேசத்திலும் வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக் குறையை சமாளிப்பதற்கான முன்ஏற்பாடாகவும் குறித்த கட்டடிங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தயார்ப்படுத்தப்படுவதாகவும் எனினும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிறமாவட்டங்களில் இருந்து எந்தவொரு மாவட்டத்திற்கும் நோயாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக் கட்டிடங்கள் பாதுகாப்பு தரப்பினரினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில்  மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் பிரதேசங்களில் கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுதத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக குறுகிய நலன் கொண்ட தமிழ் அரசியல் தரப்புகளினால்  பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சில பிரதேசங்களில் மக்களை வீதிக்கு இறக்கி தேவையற்ற பதற்றத்தினையும் ஏற்படுத்தி வருகின்றமைக்கு தன்னுடைய கவலையையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33