குருணாகல் மாவட்ட வர்த்தக நிலையங்களுக்கும் 6 நாட்கள் பூட்டு

29 Apr, 2020 | 09:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன்,  குருணாகல்  உட்பட மாவட்டத்தின் பிரதான நகரங்கள் பலவற்றில்  இன்று முதல் எதிர்வரும் மே 5 ஆம் திகதிவரை  அனைத்து வர்த்தக நிலையங்களையும்  மூட  அவ்வந்த நகரங்களின் வர்த்தக சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

குருணாகல், அலவ்வ,  கல்கமுவ, குளியாபிட்டிய,  ஹிரிபிட்டிய, கும்புக்கெட்டே ஆகிய நகரங்களின் வர்த்தக நிலையங்களை இவ்வாறு மூட அவ்வந்த நகர வர்த்தக சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

குருணாகல், அலவ்வ நகரில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்யை தினம் முதல் அங்கு அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

  குளியாபிட்டிய பகுதியில்  ஹம்மலவ மற்றும் உடுபத்தாவ  பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களான கடற்படையினர், நகர் எங்கு சஞ்சரித்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் குளியாபிட்டிய நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 குளியாபிட்டிய வர்த்தக சங்கத்தின் தலைவரும் குளியாபிட்டிய நகர சபையின் தலைவருமான  லக்ஷமன் அதிகாரி தலமையில் இன்று முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  .

இதேவேளை குருணாகல் நகரில் ஒசுசல தவிற ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மே 5 வரை மூட குருணாகல் வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.

 கொரோனா தொற்றாளர்கள் இருவர் கல்கமுவ நகரில் சுற்றித் திருந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்கமுவ  நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முதலாம் திகதிவரை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 அதே நேரம் ஹிரிபிட்டிய, கும்புக்கெட்டே பகுதி  வர்த்தக சங்கங்களும் முதலாம் திகதிவரை வர்த்தக நிலையங்களை மூட தீர்மானித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33