தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் வழக்குத் தாக்கல்!

29 Apr, 2020 | 08:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர்  நிரோஷனி ஹேவாபத்திரன,  அந்த திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர்,  பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் அகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி திலங்க பெரேரா ஊடாக அவர் இம்மனுவை இன்று இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்து சென்றமை தொடர்பில்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சி.ஐ.டி. விசாரித்து வருகின்றது.

தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அது குறித்து அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. தயாராகி வருவதாக சுட்டிக்கட்டியே,  அதனை தடுக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53