கொரோனாவை விட சர்வான் கொடியவன் : சீறிப்பாய்ந்த கிறிஸ் கெய்ல்

Published By: Digital Desk 3

29 Apr, 2020 | 06:20 PM
image

கொரோனா வைரஸை விடவும் ராம் நரேஷ் சர்வான் கொடியன் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் குற்றம் சுமத்தியுள்ளார்.

கரிபீயன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20  கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல், திடீரென  அவ்வணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து டெரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியில் கெய்ல் இணைக்கப்பட்டார்.  இந்நிலையில் ஜமைக்கா அணியிலிருந்து தன்னை வெளியேற்றியமை  அவ்வணியின் உதவி பயிற்றுநரான ராம் நரேஷ் சர்வான்தான் என கெய்ல் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து யூ டியூப்பில் வெளியான ‘வீடியோ’ பதிவில் கெய்ல் கூறியிருப்பதாவது:-

“சர்வான்...! இப்போதைக்கு கொரோனா வைரஸை விடவும் கொடியவனாக  நீ இருக்கிறாய். ஜமைக்கா அணியிலிருந்து என்னை கழற்றி விட்டதில் உனது பங்கு மிகப்பெரியது என்பதை அறிவேன்.

அணி உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சிக்கிறார்.

அவருக்கும், ஏனைய வீரர்களுக்கும் அணியில் நிறைய பிரச்சினை இருக்கிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அவர் கூறி இருக்கிறார்.

அப்படியானால், இன்னும் ஏன் எனது தொலைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு. பழிவாங்கி விட்டாய். கரிபீயன் மக்களால் அதிக நேசிக்கப்படும் நபர் நீ இல்லை.

உன்னிடம் முதிர்ச்சி இல்லை. நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டாய். இன்னமும் களத்தில் வலுவான வீரராக உள்ளேன். தொடர்ந்து வெற்றியாளராக வலம் வருவேன்” இவ்வாறு கிறிஸ் கெய்ல் அதில் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41