பாராளுமன்றை உடனடியாக கூட்டுமாறு கோரி மங்கள ஜனாதிபதிக்கு அவசர கடிதம் !

Published By: Vishnu

29 Apr, 2020 | 06:02 PM
image

(நா.தனுஜா)

அரச உத்தியோகத்தர்களுக்குச் செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் மேலும் பல செலவுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெறுவதற்கு உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக் கடிதத்தில் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளதாவது,

அரச செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான இடைக்காலக் கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் இக்க டிதத்தை எழுதுகிறேன்.

பொதுவாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வருடங்களில் புதிதாகத் தெரிவாகும் ஜனாதிபதி அவரது கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக வரவு - செலவுத்திட்டத்தைத் தயாரித்து நிறைவேற்றிக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடைமுறை அரசாங்கம் வரவு - செலவுத்திட்டத்தை நிறைவேற்றாது.

எனினும் உங்களது அரசாங்கம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் பதவியேற்றுக்கொண்டு, சுமார் 3 மாதகாலம் கடந்துள்ள நிலையிலும் நிதியமைச்சர் வரவு - செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. மக்களுக்கு வெளிப்படுத்தாத சில காரணங்களின் அடிப்படையில் உங்களது அரசாங்கம் வரவு - செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காமையினாலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியினாலும் நாடு ஒரு அரசியலமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கே இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படிருந்த நிலையில்இ அதனைத் தொடர்ந்து அரசாங்கம் நெருக்கடி நிலையொன்றை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே அதன் பின்னரான காலப்பகுதிக்கு அரச உத்தியோகத்தர்களுக்குச் செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் மேலும் பல செலவுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவது தொடர்பில்  அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெறுவதற்கு உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04