தம்பி மீதான தடைக்கு எதிராக மேன்முறையீடுசெய்யத் தயாராகும் மூத்த சகோதரன்

29 Apr, 2020 | 05:58 PM
image

உமர் அக்மல் மீதான தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்வோம் என அவரது மூத்த சகோதரரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவருமான கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 29 வயதான உமர் அக்மல், பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து கிரிக்கெட் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்த குற்றத்தினால், சகல  வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

Kamran and Umar Akmal (Credits: Twitter)

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், உமர் அக்மலின் சகோதரருமான கம்ரன் அக்மல் கூறுகையில், 

"உமர் அக்மலுக்கு இவ்வளவு கடினமான தண்டனை விதிக்கப்பட்டமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. 3 ஆண்டு கால தடை என்பது மிகவும் மோசமான தண்டனை. இந்த தடையை எதிர்த்து அவர் நிச்சியம் மேன்முறையீடு செய்வார். இதற்கு முன்பு இதே போல் சூதாட்டத்தரகர்கள் தொடர்பு கொண்டதை மறைத்த வீரர்கள் சிலருக்கு (மொஹமட் இர்பானுக்கு 6 மாத தடை, மொஹமட் நவாஸுக்கு 2 மாத தடை) குறைந்த கால தடை விதிக்கப்பட்ட நிலையில், உமர் அக்மல் மீது மட்டும் ஏன் கடினமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட அமைப்பில் மேன்முறையீடு செய்வோம்" என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37