பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து பஷில் முழுமையாக விலகி நடுநிலையாகவுள்ளார் - டிலான் 

Published By: Vishnu

29 Apr, 2020 | 04:35 PM
image

(இராஐதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஐன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ முழுமையாக விலகி தற்போது நடுநிலையாக செயற்படுகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்.

ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை அனைவருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இதனால் காரணமாகவே அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச விலகி நடுநிலையாக செயற்படுகின்றார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உட்பட பங்காளி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுனைந்த விதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது சாத்தியமற்றது ஒருவேளை கூட்டினால் சட்ட சிக்கல் ஏற்படும்.

அதாவது பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் போது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய சின்னத்தில் போட்டியிடுவதாக குறிப்பிட்டனர்.இவ்வாறான நிலையில் இவர்கள் பாராளுமன்றத்தில் எக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கும்இமக்களுக்கு நிவாரணம் வழங்கவும். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டி எதிர்தரப்பினரது ஆதரவை பெற வேண்டும் .என்ற அவசியம் கிடையாது. அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை கொண்டு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09