தேசிய விளையாட்டு விழா ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

28 Apr, 2020 | 07:49 PM
image

கெரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவையொட்டி நடைபெறவிருந்த மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான சகல போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை இதுவரை  கண்டுபிடிக்கப்படாத நிலையில் வீர, வீராங்கனைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்பதற்காக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விளையாட்டு விழாவின் இவ்வருடத்துக்கான மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளை கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து கட்டங்களின் கீழ் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றிருந்தது.

இதனிடையே, தற்போது நாட்டில் நிலவுகின்ற சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு தேசிய ரீதியிலான போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மாவட்ட மற்றும் மாகாணங்களைச் சேர்ந்த விளையாட்டுத்துறை பணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததுடன், தேசிய விளையாட்டு விழாவின் முதலாம் கட்டத்தின் கீழ் நடைபெறவிருந்த போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாட்டின் ஒருசில மாவட்டங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.  எனினும், கொரோனா அச்றுத்தால் காரணமாக நடத்த முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா பெரும்பாலும் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09