நான்காவது  தூணையும் அசைத்துப் பார்த்துவிட்ட கொரோனா!

Published By: Digital Desk 3

28 Apr, 2020 | 09:00 PM
image

உலகையே அல்லோகல்லோலப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது கொரோனா என்னும் நோய் தொற்று.

கடந்த சுமார் இரண்டு மாதங்களாக, அரசு யந்திரங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து வழிமுறைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் முற்றிலும் முடக்கிப் போட்டுவிட்டது இந்த அசுரத்தன்மை கொண்ட கொரோனா.

உலகில் இதுவரை பரவிப் பாதித்த எல்லா நோய்களைக் காட்டிலும், ஆதாரமும் அடிப்படையும் கண்டறிய முடியாத கொரோனா கொடுமையானது என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகளும், தொடர் ஊரடங்கு உத்திரவுகளும், தனிமைப்படுத்தலும், விசேட சிகிச்சைகள் போன்றவற்றிற்கு மத்தியிலும் 27 ஆம் திகதியில் உலகளவில் சுமார் 26 .இலட்சம் மக்களைப் பற்றிக் கொண்டு தொற்றியதோடல்லாமல், சுமார் இரண்டு லட்சம் உயிர்களுக்கும் மேலாக காவு வாங்கிவிட்டது.

இந்த தொற்று நோயை திட்டமிட்டு சரியான முறையில் மிகக் குறைந்த கால அவகாசத்தில் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியாது போனதற்குக் காரணம், இதற்கான பிரத்யேக மருந்து எந்த சிகிச்சை முறையிலும் இதுவரையிலும் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதேயாகும்.

உலகெங்கிலும் கொரோனா தொற்று நோயைக் குணப்படுத்த மிக அருகாமையிலான உத்தேச மருத்துவ சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தான் நிதர்சனம்.

பல்லாண்டு காலமாக, உலகெங்கிலும் பேணிப் பாதுகாக்கப் பட்டு வந்த பாரம்பரியங்கள் கணநேரத்தில் உடைத்தெறியப்பட்டு விட்டன. மனிதாபிமானச் சிதைவுகளும், மனிதநேயப் பேரழிவுகளும் பரந்த அளவில் தலைத்தூக்கத் தொடங்கிவிட்டன.

உலகில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்காததால் இலட்ச்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வதாரத்தை இழந்து உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அல்லும் பகலும் அலைந்து திரியும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான மருத்துவமனைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக மூடப்பட்டுக் கிடப்பதால், கொரோனா தவிர்த்து மற்ற நோய்களுக்கு, நோயாளர்கள் எளிதில் சிகிச்சை பெற இயலவில்லை.

உலகம் முழுவதிலுமுள்ள சர்வமத வழிபாட்டுத் தலங்கள் எல்லாமும் மூடப்பட்டுள்ளன. இதை எண்ணிப்பார்த்தாலே மனம் ஏதோ ஒரு இனந்தெரியாத கலக்கத்தில் ஆழ்ந்து போகின்றது.

கொரோனாவிற்கும் மேற்பட்ட துயரம் ஒன்று உலகமக்களைத் தாக்கக் காத்திருக்கின்றதோ என்ற ஆதாரமற்ற அச்ச உணர்வும் நம்மை ஆட்கொள்கின்றது. இதற்கிடையில், “காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே” என்பதைப் போல், எரிகின்ற வீட்டில் எடுத்தவரை இலாபம் என்பதைப் போல் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரட்டிப்பு விரையில் விற்று வரும் வணிகர்கள் ஒரு பக்கம் நம்மை வேதனைப்படுத்தி வருகின்றார்கள். அதேசமயம், இரவு பகல் பாராது கொரோனோவை எதிர்த்துப் போராடுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நாம் நமது நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளக்கடமைப்பட்டுள்ளோம்.

இந்த கொரோனா கலவரங்களுக்கிடையில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சாரார் இருக்கின்றார்கள் என்றால் அது ஊடக நிறுவனங்கள்தான். கொரோனா காலத்தில் டெலிவிஷன் பார்ப்போரின் எண்ணிக்கை ஊரடங்கின் காரணமாக கணிசமாக உயர்ந்துவிட்ட போதிலும், உலகம் முழுவதும் இதுகாறும் பலவருடங்களாக சுபிட்சத்துடன் இயங்கிவந்த அசு்சு ஊடகங்கள், அதாவது தினசரி பத்திரிக்கைகள் மற்றும் வாராந்திர-மாதாந்திர பத்திரிக்கைகள் மிகவும் பரிதாபகரமான சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் சில, சிறிது காலம் “லே ஆப்” எனும் சட்டபூர்வ விடுமுறையை விட்டு விட்டு பின்பு முழு அளவில் அச்சிடுவதை நிறுத்திவிட்டன.

இவற்றின் நிலையானது திரிசங்கு சொர்க்கத்தைப் போன்று, நடத்தவும் முடியாமல், நிறுத்தவும் முடியாத நிலையில் தள்ளாட்டம் கண்டு வருகின்றன. தொடர்ந்து பணியே இல்லாது, பணியாளர்களுக்கு நிறுவன வருவாய் ஓயந்து போன சந்தர்ப்பத்தில் சம்பளமும் இதரபடிகளும் கொடுக்க முடியாத நிலையைச் சந்தித்து வருகின்றன.

பத்திரிக்கைகள், விளம்பர வருவாய் முற்றிலும் நின்று போன தருவாயில், பத்திரிக்கை நிறுவனங்கள், அதிலும் உலகப்புகழ் பெற்ற பத்திரிக்கை நிறுவனங்களும் கூட வரலாறு காணாத துயரத்தைச் சந்தித்து வருகின்றன. நல்ல அனுபவத்தோடு கூடிய அற்புதமான பணியாளர்களையும் வீட்டிற்கு அனுப்பும் துன்பநிலை உருவாகி உள்ளன.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாய் மதிக்கப்பட்டு வரும் பத்திரிக்கை ஊடகங்களை இப்படி பரிதவிப்பான நிலையில் நெடுநாள் விட்டு வைப்பது கொஞ்சமும் நல்லதல்ல. மற்ற துறைகளுக்கு ஓடிஓடி உதவிடும் அரசுகள் கொரோனாவால் நலிந்து வரும் பத்திரிக்கை நிறுவனங்களையும் சற்றே கண்கொண்டு பார்த்து கைதூக்கி விட்டால், பாரம்பரியமான பத்திரிக்கை ஊடகங்களும் காலூன்றி மீண்டும் எழுந்திருக்க இயலும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை! மேலும் ஜனநாயகத்தின் மதிப்புமிக்க நான்காவது தூணும் சாய்ந்து விடாமல் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடும் என்பதிலும் ஐயமில்லை!

- A.A. ராமன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13