கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தனிப்பட்ட விடயங்களுக்கு ஊடகங்கள் மதிப்பளிக்க வேண்டும் : பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள்

Published By: J.G.Stephan

28 Apr, 2020 | 07:13 PM
image

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்யும் சந்தர்ப்பங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் வதிவிடங்களை பதிவு செய்து அவற்றை காண்பிக்கும்போது அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் சுகாதார வழிமுறை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பான காட்சிகளை சில தொலைக்காட்சி அலைவரிசைகள் செய்தி ஒளிபரப்பு செய்வதும், ஏனைய நிகழ்ச்சிகளில் காண்பிப்பதும், பத்திரிகைகளில் செய்திகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரிப்பதும் நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன  இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாத்து மதிப்பளித்து செயற்படும் பட்சத்தில் அவர்கள் பரிசோதனைக்கு சுயமாக முன்வருவதை ஊக்கமளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்தல் அல்லது ஒளிபரப்பு செய்வதானது கடமையில் ஈடுப்படும் சுகாதார அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சு காட்டியுள்ளது..

எனவே, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளின் போதோ அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளின் போதோ சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து செல்வதையும் ஒளிப்பதிவு செய்வதையும் தவிர்ந்துகொள்ளுமாறும் தொற்றுக்குள்ளானவர்களின் தனிப்பட்ட கௌரத்திற்கு மதிப்பளித்து செயற்டும் வகையில் ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் படியும் ஊடக நிறுவனங்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57