அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 128 பில்லியன் ரூபா நிதியுதவி எங்கே ? - இந்துநில் துஷார கேள்வி

Published By: Vishnu

28 Apr, 2020 | 06:01 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் சுமார் 128 பில்லியன் ரூபா நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது. 

இந்த நிதியை கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்துநில் துஷார அமரசேன கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தக் கூடியதாகவிருந்த விடயத்தை முறையான முகாமைத்துவம் இன்மையால் அரசாங்கம் கைநழுவ விட்டிருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற அமர்வில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது கொரோனா வைரஸ் இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். 

எனினும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நாட்டில் முதலாவது நோயாளர்கள் இனங்காணப்பட்ட சில தினங்களில் நாட்டை முடக்குமாறு முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க வலியுறுத்தினார். எனினும் அரசாங்கம் இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமை எதிர்தரப்பினருக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஆளுந்தரப்பினர் சிலர் எம்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கொரோனா வைரஸ் பொதுஜன பெரமுனவினருக்கு மாத்திரம் தொற்றக் கூடியதல்ல. நாமும் எமது அன்றாட செயற்பாடுகளை பயத்துடனேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் முறையான முகாமைத்துவத்தை முன்னெடுக்காமல் நாட்டை இவ்வாறான பாரதூரமான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளமை கவலையளிக்கிறது.

இந்நிலையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வதாக நகைச்சுவை கூறிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கொரோனாவை யுத்தத்துடன் ஒப்பிக் கொண்டிருக்கிறார். இது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமாகும். எனவே கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் எம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

ஓய்வூதியம் கிடைக்கப் பெறாமல் போகும் என்பதற்காகவே நாம் பாராளுமன்றத்தைக் கூட்டச் சொல்வதாகக் கூறுகின்றனர். உண்மையில் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துத் தெரிவான சுமார் 40 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அற்றுப் போயுள்ளது. எனினும் அதனைப் பெற்றுக் கொள்வது எமது எதிர்பார்ப்பல்ல. எமக்கு ஓய்வூதியம் மாத்திரமல்ல பாராளுமன்ற அமர்விற்கு செல்லும் போது எமக்கு வழங்கப்படுகின்ற போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட எந்த கொடுப்பனவும் தேவையில்லை என்று கையெழுத்திட்டு உத்தயோகபூர்வமாக அறிவிக்க நாம் தயாராகவுள்ளோம்.

தற்போது பொலிஸ் மற்றும் பாதுகாப்புபடையினரும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு நாட்டின் பிரதானியான ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். காரணம் சுகாதாரத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரே கொரோனா ஒழிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன் வரிசையில் நின்று போராடுகின்றனர். எனவே இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும்.

சர்வதேச நிதியுதவி

ஆளுந்தரப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரொருவர் சர்வதேசத்திடமிருந்து ஒரு ரூபாவேனும் நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகின்றார். அவர் கூறுவது உண்மை தான். காரணம் எமக்கான நிதியுதவி டொலர்களிலும் யூரோக்களிலுமே கிடைக்கப் பெற்றுள்ளது.

சீனாவினால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியால் 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களும், அமெரிக்காவினால் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தினால் 24 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இ ஜப்பான் அரசாங்கத்தினால் 655 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இ தேசிய ரீதியில் 848 மில்லியன் ரூபாவும் இ டயலொக் நிறுவனத்தினால் 200 மில்லியன் ரூபாவும் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதியின் மொத்த தொகை இலங்கை ரூபாவில் சுமார் 128 பில்லியன்களாகும். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. இந்த 5000 ரூபாய் கொடுப்பனவு சுமார் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டால் கூட அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிதியில் 1.5 பில்லியன் மாத்திரமே செலவாகும். அதே போன்று 30 இலட்சம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால் 30 பில்லியன் மாத்திரமே செலவாகும். ஆனால் அரசாங்கம் இந்த நிதியுதவியை என்ன செய்கிறது ?

இவ்வாறிருக்க சுமார் 3 பில்லியன் 5000 ரூபாய் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. டொலர்களில் கிடைக்கப் பெறும் நிதியைப் பதுக்கி ரூபாய்களில் செலவிடவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04