க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

27 Apr, 2020 | 10:57 PM
image

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

இது 73.84 வீதமாகும் என பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரநவதாசன் தெரிவித்தார்.

கடந்த முறை சாதாரணதர பரீட்சைக்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 246 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 256 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

பரீட்சாத்திகளில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 189 பேர் பாடசாலை மூலமும், 2 இலட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்கு  விண்ணப்பித்திருந்தனர். 

நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 989 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றதோடு, 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

அதில், பெறுபேறுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். இது 73.84 வீதமாகும்.

கணித பாடத்தில் 66.82 வீதத்தினர் சித்தியடைந்துள்ளனர்.

பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளங்களான www.doenets.lk kw;Wk; www.results.exams.gov.lk என்பவற்றில் சென்று பார்வையிட முடியும்.

இத்துடன் கொழும்பு  பிராந்திய பாடசாலை அதிபர்கள் எவரும் நேரில் திணைக்களத்துக்கு வந்து மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. 

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படுமானால் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் அமைப்பின்  011-2784208 > 011-2784537 > 011-3188350 0113140314 என்ற இலக்கங்களுக்கும் 1911 என்ற  அவசர தொலைபேசி  இலக்கத்துக்கும் அழைப்பினை மேற்கொண்டு தெரிந்து கொள்ள முடியும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08