சீனாவினால் பெருமளவு பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

Published By: Digital Desk 3

27 Apr, 2020 | 05:37 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனை முற்றாக ஒழிப்பதற்காகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களுக்காக சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக சீன அரசாங்கத்தால் 211 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சுகாதார அங்கிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹூ வே சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் இவற்றை இன்று திங்கட்கிழமை கையளித்தார்.

சீன அரசாங்கத்தால் கொரோனா வைரசுக்கு எதிராக சுகாதாரத்துறையை பலப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களோடு 20 ஆயிரத்து 16  Novel Coronavirus (2019-ncoV) Nucleic Diagnisic Kit (PCR-Fluorescence PProbing) மருத்துவ முகக் கவசங்கள் 10 000 , சத்திர சிகிச்சை முகக் கவசங்கள் ஒரு இலட்சம் , ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் அகற்றக் கூடிய அங்கிகள் ஒரு இலட்சம் , Medical Goggle 1000  , ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய 5000 கையுறைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் கொரோனா ஒழிப்பிற்காக சீனா முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் பவித்திரா வன்னயாராச்சிக்கு தெளிவுபடுத்தினார்.

இது போன்று இலங்கை நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன உதவிகள் செய்துள்ளமைக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40