ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற மோதலில் 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் பலி !

Published By: Vishnu

27 Apr, 2020 | 05:05 PM
image

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் பின்வாங்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவம் இதுவென கூறப்படுகிறது. இதேவேளை, நேற்று இடம்பெற்ற முதலாவது மோதலில் 4 பேர் உயிரிழந்துள்னர். இந்நிலையில் மொத்தமாக இந்த மோதலில் ஏழு பயங்கவரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்கம் மாவட்டத்தில் லோயர் முண்டா என்ற பகுதியிலேயே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரு தரப்பினருக்கிடையிலான இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் சார்பில் எவரும் காயமடையவில்லை என்றும் குறித்த பகுதியின் மூத்த பொலிஸ் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடந்த 40 க்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களில் குறைந்தது 76 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17