IDH வைத்தியசாலைக்கு தீயணைப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கிய HNB

27 Apr, 2020 | 12:28 PM
image

இலங்கையில் முன்னணியிலுள்ள தனியார் துறை வங்கியான HNB PCL , 68 தீயணைப்பு கருவிகளை தேசிய தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு (IDH) நன்கொடையாக வழங்கியுள்ளது.

COVID-19 வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மட்டுமன்றி தேசிய ரீதியிலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளுக்குள் ஏதாவது தீவிபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு HNB துணைபுரியும் வகையில் இந்த கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையின் முன்னணி தனியார் வங்கி, IDH மருத்துவமனைக்கும் மற்றும் அதில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வகின்றமை குறிப்பிடத்தக்கது.

HNB தலைவர் தினேஷ் வீரக்கொடி, தலைமை இயக்க அதிகாரி டில்ஷான் ரொட்றிகோ, தலைமை டிரான்ஸ்போமேஷன் அதிகாரி சிரந்தி குரே, சிரேஷ்ட முகாமையாளர் - பொறியில் - ரொஷான் பெர்னாண்டோ மற்றும் நிலைத்தன்மை பொறுப்பதிகாரி ஷெனல் பெரேரா ஆகியோர் IDH மருத்துவமனைக்கு தண்ணீர் மற்றும் Co2 அடங்கிய 34 தீயணைப்புக் கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த HNB இன் தலைவர் தினேஷ் வீரக்கொடி, “இவ்வாறான முக்கியமான

காலக்கட்டத்தில் சுகாதாரத் துறைக்கு உதவி செய்ய நாங்கள் எங்கள் பங்கிலான எல்லாவற்றையும் செய்யவேண்டியுள்ளதை HNB இல் உள்ள நாம் அனைவரும் உணர்கிறோம். 

அதேநேரம் மருத்துவமனையில் சிகிச்சையளிப்புக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து, நெருக்கடியின் அளவையும் தன்மையையும் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு எந்தவகையிலாவது ஆதரவளிப்போம் என உறுதியளிக்கின்றேன்.” என தெரிவித்தார்.

IDH பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க – தொற்றுநோய் / IDH ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, சுகாதார அமைச்சின் அதிககரிகளான டொக்டர் அசித்த திசேரா மற்றும் IDH  மருத்துவ அலுவலர் திட்டமிடல் டொக்டர் அஸாட் சமாட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

படத்தில்: (இடமிருந்து வலமாக)

HNB தலைவர் தினேஷ் வீரக்கொடி மற்றும் தலைமை இயக்க அதிகாரி டில்ஷான் ரொட்றிகோ ஆகியோர் IDH பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க (மத்தியில்) சுகாதார அமைச்சின் அதிகாரிகளான டொக்டர் அசித்த திசேரா, IHD மருத்துவ அதிகாரி திட்டமிடல் டொக்டர் அஸாட் சமட், ஆகியோருக்கு தீயணைப்பு கருவிகளை வழங்கும் போது தொற்றுநோய் / IDH ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, HNB பிரதம டிரான்போமேஷன் அதிகாரி சிரந்தி குரோ, சிரேஷ்ட முகாமையாளர் - பொறியியலாளர் ரொஷான் பெர்னாண்டோ மற்றும் அலுவலக பொறுப்பதிகாரி நிலைத்தன்மை ஷெனல் பெரேரா ஆகியோர் இருப்பதை படத்தில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58