நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் 500 ரோஹிங்கியா அகதிகளுக்கு அனுமதி மறுத்த பங்களாதேஷ்!

Published By: Vishnu

26 Apr, 2020 | 02:16 PM
image

வங்களா விரிகுடாவில் இரண்டு மீனபிடி இழுவைப் படகுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 500 ரோஹிங்கியா அகதிகளை கரைக்கு கொண்டு வருவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

பங்களாதேஷின் இந்த தீர்மானத்துக்கு சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.

எனினும் பல வாரங்களாக கடலில் சிக்கித் தவிப்பதாக கூறப்படும் ரோஹிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது பங்களாதேஷின் பொறுப்பு அல்ல என்று அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரோஹிங்கியர்களை அழைத்துச் செல்லுமாறு ஏன் பங்களாதேஷுக்கு அழுத்தங்கள் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் ஆழ்கடலில் உள்ளனர். பங்களாதேஷின் கடற் பிராந்தியத்திலும் கூட இல்லை. வங்களா விரிகுடாவைச் சுற்றி குறைந்தது எட்டு கடலோர நாடுகள் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு மலேசிய அரசாங்கம் மறுத்துள்ள நிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்களாக சுமார் 500 ரோஹிங்கியா அகதிகள் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளில் வங்களா விரிகுடாவில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான UNHCR இன் கூற்றுப் படி, பல வாரங்களாக நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் இவர்களுக்கான போதுமான உணவும் தண்ணீரும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதேவளை சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவை அடையத் தவறியமையினால் மோசமான நிலையிலிருந்து படகொன்றில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 396 ரோஹிங்கியா அகதிகளை மீட்டதாகவும் மோமன் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52