பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக்கொள்வனவிற்கு வரிவிலக்கு செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்க வேண்டுமென கோரி உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

குறித்த வரிவிலக்கு காரணமாக அரசாங்க திறைசேரிக்கு பல மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுமென மனுதாரரான நாகானந்த கொடிதுவக்கு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் அநாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரச அதிகாரிகளை குறிப்பிட்டுள்ளார்.