சிகிச்சையளிக்கும் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம் : அனில் ஜாசிங்க

Published By: J.G.Stephan

25 Apr, 2020 | 07:15 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்களுக்கான சேவையில் ஈடுபடும் போது நோயாளர்களை இனங்காணல் மற்றும் சிகிச்சையளிக்கும் போது சுகாதார சேவையாளர்கள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைரஸ் ஒழிப்பிற்காக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் நோயாளர்களை இனங்காணுதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பவற்றின் போது சுகாதாரத்துறையினர் முறையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது வரையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைவரம் இதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துகின்றது.



நபர்களுடன் செயலாற்றியதன் பின்னர் அவர்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளாகாதவர்கள் என வேறுபடுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தொற்றுக்குள்ளானோருக்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உதாரணமாக அண்மையில் மருதானையில் இனங்காணப்பட்ட பெண் தொடர்பில் வைத்தியர்கள் மிகுந்த அவதானம் செலுத்தினர். அவரது வசிப்பிடம் முதற்கொண்டு அனைத்தும் சுகாதார அதிகாரிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டது. அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் எந்நேரமும் பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருத்தல் அத்தியாவசியதமானதாகும். இதன் மூலம் சிகிச்சையளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர் பாதிக்கப்படுவதை குறைத்துக் கொள்ள முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52