கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து - முகாமிலிருந்து வெளியேறவும் தடை

Published By: Vishnu

25 Apr, 2020 | 08:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து கடற்படை உறுப்பினர்களினதும் விடுமுறைகளும்  மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். 

கொரோனா தொற்று பரவல் காரணமாக, வெலிசறை கடற்படை முகாமில் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தாருமாக 4000 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந் நிலையில்,  கடற்படையினரின் அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல தேவையான மனித வளத்தை முகாமை செய்யும் நோக்குடன் இந்த விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 இதனைவிட, தற்போது கடற்படையினர் வெளியே இருக்கும் போது, அவர்களை மையப்படுத்தி தேவையற்ற பீதிகள் கிளப்பப்பட்டு , அனாவசியமான அச்ச நிலை சூழல் ஒன்று உருவாக்கப்படுவதை தவிர்க்கும் முகமாகவும்  கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே எந்த கடற்படை வீரரும் தமது முகாமிலிருந்து வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கூறியுள்ளார்.

குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40