மன்னாரில் தனியார் வைத்தியசாலையில் தீ விபத்து

Published By: Digital Desk 3

25 Apr, 2020 | 03:55 PM
image

மன்னார் மாவட்டத்தில்  தீயணைப்பு வாகன ஏற்பாடு இல்லாமையினால் நேற்று (2404.2020) இரவு 7.30 மணியளவில்  மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதி, மன்னார் பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று  எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தனியார் வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாக குறித்த வைத்தியசாலை  எரிந்து நாசமாகியுள்ளது.

வைத்தியசாலையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான  மருத்துவ உபகரணங்கள் , மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட பல இலட்சம் ரூபாய்பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 

தீவிபத்து ஏற்பட்டவுடன்  உடனடியக செயற்பட்ட மன்னார் பொலிஸார், மன்னார் நகர சபையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர்  பொது மக்களின் உதவியுடன் குறித்த பகுதியில் உள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வாகன ஏற்பாடு மன்னார் மாவட்டத்தில் இல்லாமையினால் மன்னார் நகரசபை மற்றும் பொலிஸாரின் பௌசர்கள் மூலம் நீர் கொண்டு வந்து குறித்த விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீயணைப்பு வாகனம் இல்லாமையினால் இது வரை 10 மேற்பட்ட தீ விபத்துக்கள் கடந்த இரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்ட பகுதிகளில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15