கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க சர்வதேச உச்சி மாநாட்டை நடத்தவுள்ள பிரிட்டன்!

Published By: Vishnu

25 Apr, 2020 | 01:51 PM
image

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க, சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் ஐக்கிய இராஜ்ஜியம் ஒரு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.

இந்த சர்வதேச மாநாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்த டொமினிக் ரோப், 

நோய்களுக்கு எல்லைகள் இல்லை. எனவே கொரோனவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க 'Gavi' (தடுப்பூசி கூட்டணி) க்கு முழுமையாக நிதியளிக்கப்படுகிறாதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Gavi என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும், இது தடுப்பூசிகளுக்கான அணுகலை மேம்படுத்த பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சவுதி அரேபியா, நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட சர்வதேச பங்காளிகளுடன் மே 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் 'Global Response' உச்சி மாநாட்டை பிரிட்டன் இணைந்து நடத்தவுள்ளதாகவும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் கூறினார்.

கோவிட் தடுப்பூசி மற்றும் சிறந்த பரிசோதனையை உருவாக்கும் முயற்சிகளில் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா வைரஸ் 'Global Response' உச்சி மாநாட்டை மே 4 அன்று எங்கள் பங்காளிடகளுடன் இணைந்து நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

Photo Credit : Reuters

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47